» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:41:39 AM (IST)
திண்டுக்கல் அருகே, ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் தங்கியிருந்து படித்து வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில், என்ஜினுக்கு அருகில் உள்ள முன்பதிவில்லாத பெட்டியில் அந்த மாணவி ஏறி ஈரோட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
ரயில் விருதுநகர் ரயில் நிலையத்தை அடைந்ததும் வாலிபர் ஒருவர், மாணவி பயணம் செய்த பெட்டியில் ஏறினார். அம்பாத்துரை அருகே ரயில் வந்த போது, அந்த வாலிபர் மாணவியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதைப்பார்த்த சக பயணிகள், ரயில் நிலைய அவசரகட்டுப்பாட்டு எண் 139-ல் தொடர்புகொண்டு இதுகுறித்து புகார் கொடுத்தனர்.
இதையடுத்து ரயில் திண்டுக்கல் வந்தபோது மாணவி பயணம் செய்த முன்பதிவில்லாத பெட்டிக்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர் விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் (33) என்பதும், கோவையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. கோவைக்கு செல்வதற்காக ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த போது, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடும் ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணித்த, கர்ப்பிணி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அனைத்து ரயில்களிலும் பெண்கள் பெட்டியில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், மாணவிக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)
