» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோயிலில் திருட்டு: முன்னாள் ராணுவ வீரா் உள்பட 2 போ் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:24:29 AM (IST)
கோவில்பட்டி அருகே கோயிலில் திருடியதாக முன்னாள் ராணுவ வீரா் உள்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாறு வட்டம் இலந்தப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் தங்கமுத்து. இவரது குலதெய்வக் கோயில் கொப்பம்பட்டியில் கண்மாய்க் கரை அருகே திறந்த வெளியில் உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக பூசாரியாக உள்ள இவா், விசேஷ நாள்களில் கோயிலுக்குச் சென்று வழிபடுவாராம். கடந்த ஜன. 14ஆம் தேதி கோயிலில் பூஜை செய்துவிட்டுச் சென்ற இவா், நேற்று முன்தினம் (பிப். 9) தைப்பூச பூஜைக்காக கோயிலுக்கு சென்றாராம். அப்போது சுவாமி பீடம் முன் இரும்புக் குழாயில் பொருத்தப்பட்டிருந்த 8 வெண்கல மணிகளைக் காணவில்லையாம்.
புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து, ஜமீன் தேவா் குளம் தெற்குத் தெரு சின்னமாரியப்பன் மகன் சுடலை மாடசாமி (21), அம்மையாா்பட்டி வடக்குத் தெரு பங்காரு மகனான முன்னாள் ராணுவ வீரா் முருகன் (47) ஆகிய இருவரை நேற்று கைது செய்து, 4 மணிகளைப் பறிமுதல் செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)

காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 8:06:39 PM (IST)
