» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்களுக்கான பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது : அமைச்சர் பி.கீதா ஜீவன் பேச்சு

சனி 8, பிப்ரவரி 2025 4:57:21 PM (IST)



பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்றது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (08.02.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" நிதிகல்வி அறிவு பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசியதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை என்பது பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள், முதியவர்கள் அவர்களுடைய பாதுகாப்பு நலன் மற்றும் அவர்களை பாதுகாக்க கூடிய சட்டத்தை சீர்திருத்தம் செய்யக்கூடிய ஒரு துறையாக செயல்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தின் மூலம் நம்முடைய முதலமைச்சர் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அத்தனை முக்கியத்துவமான திட்டங்களான மகளிர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். கல்லூரி படிக்கும் பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டம். கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கான தமிழ்புதல்வன் திட்டம். பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக காவல்துறையும் சமூக நலத்துறையும் இணைந்து அனைத்து பெண்களுக்கும், மாணவிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கான விழிப்புணர்வு உதவி எண்கள் 1098, பெண்களுக்கான உதவி எண் 181, அதே போல் புதிதாக தொலைபேசியின் மூலம் மிரட்டுவோர்கள் மீது புகார் அளிப்பதற்கு சைபர் கிரைமின் எண் 1930 ஆகிய உதவி எண்கள் நம்முடைய முதலமைச்சர் அவர்களால் முறையாக 24 மணி நேரம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புகார் அளிப்பவருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலே அதிக அளவு பெண்கள் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு தான். இங்கு தான் 41% பெண்கள் உழைக்கிறார்கள். பெண்களுக்கான பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இன்று பேருந்து நிலையத்தில் புதிய பேருந்தை தொடங்கி வைத்துள்ளோம். இந்த புதிய பேருந்தை நம்முடைய முதலமைச்சர் மாற்றி அமைத்துள்ளார்கள். பேருந்தில் உள் பக்கமும் வெளிப்பக்கமும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்களை டிரைவர் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

அவசர மணி ஆங்காங்கே பேருந்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு யாராவது இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் நீங்கள் அந்த பட்டனை அழுத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் அளவிற்கு பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நம்முடைய முதலமைச்சர் பெண்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் எடுத்து வருகிறார்கள். இங்கு வந்திருக்கும் பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். பெண் குழந்தைகள் தான் பெற்றோர்களை கவனித்துக்கொள்வார்கள். ஆகவே பெண் குழந்தைகளையும், ஆண் குழந்தைகளையும் சரி சமமாக வளர்க்க வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதிக்க சொல்லி வளருங்கள். பெண் குழந்தைகளை சமமாக படிக்க வைத்து இன்னும் தைரியமாக வளர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் பெண் குழந்தைகள் தங்கி வரும் 29 குழந்தைகள் இல்லத்திற்கு NTPL நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.9.50 இலட்சம் மதிப்பிலான Sanitary Napkin Incenerators களையும், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். முன்னதாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான குறும்படம் போட்டிக்கான ஒட்டுவில்லையை அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி பிரேமலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யாழினி, மாநில உறுப்பினர் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் வழக்கறிஞர் சொர்ணலதா, நிர்வாக இயக்குநர் DSF Grand Plaza திவ்யா பிரைட்லின், அரசு அலுவலர்கள் பள்ளி மாணவியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory