» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் 11ஆம் தேதி தைப்பூசம் தெப்பத் திருவிழா!

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 5:09:48 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் வருகிற 11ஆம் தேதி செவ்வாய்கிழமை தைப்பூசம் தெப்பத் திருவிழா  நடைபெற உள்ளது.

தூத்துக்குடியில், பிரசித்தி பெற்ற சிவன் கோவில் எனப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் வருகிற 11ஆம் தேதி செவ்வாய்கிழமை தைப்பூசம் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 9.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்ப பூஜை, ருத்ரஜெபம், மூலமந்தரம் மாலாமந்தரம், ஹோமம், மஹா அபிஷேகம், தீர்த்தவாரி, கும்பாபிஷேகம் பூஜைகள் நடக்கிறது.

மாலை 6.00 மணிக்கு ஷோடச மஹா தீபாராதனை, இரவு 7.00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ சுந்தரபாண்டி விநாயகர், அருள்தரும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளி, மங்கள இசை, வேதபாராயணம், திருமுறைபாராயணம், திருச்சுற்றுவலம் வருதல் நிகழ்ச்சியும், இரவு 9.30 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ சுந்தரபாண்டி விநாயகர், அருள்தரும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் ரதவீதி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory