» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: 111 பெண்கள் உட்பட 200பேர் கைது!

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 4:23:02 PM (IST)



ஆதியாக்குறிச்சியில் 1000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உடன்குடியில் போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தொழில் நிறுவனம் அமைக்க ஆதியாக்குறிச்சி ஊராட்சியில் சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் அருகில் உள்ள இடங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்புக்கு உடன்குடி , அதியாக்குறிச்சி, வெங்கட் ராமானுஜபுரம், குலசேகரன் பட்டினம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பை கண்டித்தும், தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட கோரியும் உடன்குடி பேரூராட்சி, அதியாக்குறிச்சி மற்றும் மாதவன் குறிச்சி ஊராட்சி பகுதி மக்கள், வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் இன்று உடன்குடி  பாரதி திடலில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. போலீசார் இதற்கு அனுமதி மறுத்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

இதில் விவசாய சங்கத் தலைவர் சந்திரசேகர், வியாபாரி சங்கத் தலைவர் ரவி, அதிமுக  உடன்குடி ஒன்றிய செயலாளர் தாமோதரன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்  அமிர்தா எஸ் மகேந்திரன், வெங்கட் ராமானுஜபுரம்  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்  ராஜ்குமார்,  ஒன்றிய இளைஞரணி  செட்டியாபத்து ராம்குமார், உடன்குடி ஒன்றிய தவெக செயலாளர் பத்ரி பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 111 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதி. நிலத்தை கையகப்படுத்தும் அறிவிப்பை அரசு திரும்ப பெறாவிட்டால், அடுத்த கட்டமாக கடைகளை அடைத்து மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory