» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகள் கைது: போலீசார் தீவிர சோதனை

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 11:50:24 AM (IST)



தூத்துக்குடியில் இருந்து  திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 13பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் இந்த மலையின் ஒரு பக்கம் சிக்கந்தர் தர்காவும் உள்ளது. இங்கு இஸ்லாமியர்கள் பலரும் சென்று வரும் நிலையில் இந்த தர்காவில் ஆடு கோழி பலியிட்டதாகவும், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி அசைவ உணவு உண்டதாகவும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து இந்து முன்னணி சார்பாக திருப்பரங்குன்றம் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்திருந்தது.  இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக சமூக வலை தளங்ககளில் தகவல் பரவியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அந்தந்த பகுதியில் உள்ள பா.ஜ.க.வினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரை கைது செய்து வருகின்றனர். 


இந்நிலையில் திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு செல்ல முயன்றதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சிவலிங்கம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ராகவேந்திரா உள்பட 13 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதில் 5 பேர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வைதை்து மதுரை செல்லும் பஸ்ஸில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  மாவட்டம் முழுவதும் இந்து முன்னணியினர் மொத்தம் 62 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும் போராட்டத்தில் செல்பவர்களை தடுப்பதற்காக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.



மக்கள் கருத்து

உண்மைFeb 4, 2025 - 06:49:00 PM | Posted IP 172.7*****

இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தானே ஒரு நாடு பிரிச்சி கொடுத்தாச்சு அங்கே போக வேண்டியது தானே

adakkumuraiFeb 4, 2025 - 01:41:38 PM | Posted IP 172.7*****

ithu jananayaga reethiyil nadaiperum porattathai tadukkum adakkumurai

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education





New Shape Tailors



Thoothukudi Business Directory