» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பீகார் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்பது இதுவே முதல்முறை: கனிமொழி எம்பி கருத்து!

சனி 1, பிப்ரவரி 2025 5:13:50 PM (IST)

என்னுடைய அனுபவத்தில் முதல்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிவிட்டுள்ளார். 

நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் உரையின் போது, பீகாருக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் கொடுத்திருக்கிறது. இதனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் இது பீகார் மாநிலத்திற்கான பட்ஜெட் என்று விமர்சித்து வருகின்றனர். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே திட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை என்று விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து திமுக தரப்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்பி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "என் அரசியல் அனுபவத்தில் முதல்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் அமர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறி இருக்கிறார். 

தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், "பீகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

அந்தFeb 4, 2025 - 03:06:25 PM | Posted IP 162.1*****

கண்ணுமொழி ஈ ஈ ஈ பல்லு காட்டிட்டே போய்டும்

UNMAIFeb 3, 2025 - 02:57:51 PM | Posted IP 172.7*****

TN 39 MPs DOING ANYTHING FOR TAMILANS? WASTE......

MmmmFeb 1, 2025 - 05:39:07 PM | Posted IP 172.7*****

Supper akka

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital






Thoothukudi Business Directory