» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்பிட்டில் மீன் இறங்கு தளம் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 29, ஜனவரி 2025 3:22:51 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்பிட்டில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (29.01.2025) மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் ரூ.5 கோடிமதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம், திரேஸ்புரத்தில் ரூ.21 கோடி மதீப்பிட்டில் மீன் இறங்கு தளத்தை மேம்படுத்தும்பணி மற்றும் சிப்பிகுளத்தில் ரூ.7 கோடி மதீப்பிட்டில் மீன் இறங்கு தளத்தை மேம்படுத்தும்பணி ஆகியவற்றை திறந்து வைத்ததைத்தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைஅமைச்சர் பி.கீதா ஜீவன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள பயிற்சி மையத்துடன் கூடிய ஒருகிணைந்த அலுவலகக் கட்டிடத்தின் மூலம் மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கான பயிற்சியினை வழங்கிட முடியும் அதோடு மீனவர்கள் பிடித்துவரும் மீன்களை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதால் மீனவர்களின் வருமானம் அதிகரிக்கும். இதன் மூலம் மீனவர்களின் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் விதமாக இந்த பயிற்சி மையம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திரேஸ்புரத்தில் கட்டப்பட்டுள்ள மீன் பிடி இறங்குதளங்கள் மேம்படுத்தப்படும் பணி 2013 ஆம் ஆண்டு இந்த பகுதியில் கட்டிக்கொடுக்கப்பட்டது. அந்த மீன்பிடி இறங்குதளமானது சேதமைடைந்துள்ளது. அதனை சரி செய்ய பல்வேறு வகையில் கோரிக்கை வரப்பெற்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த சேதமடைந்த மீன் பிடி இறங்குதளத்தை மேம்படுத்தும் பணியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

புதிதாக 25 மீட்டர் தூரத்திற்கு மீன்பிடி அமையும்தளம் அமைக்கப்பட்டது. அதனையொட்டியுள்ள 3 இலட்சத்து 47,900 கனமீட்டர் அளவுள்ள கடற்கரை பகுதிகள் முழுவதும் ஆழப்படுத்தி தூர்வாரும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அந்த பணி இன்று முடிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மீனவ மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திரேஸ்புரம் பகுதிகளில் 1200 நாரிழைப் படகுகள் உள்ளது. இங்கு உள்ள மீனவ மக்கள்கள் தங்கி வேலை செய்வதற்காக இந்த மீன்பிடி இறங்குதளம் மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த திட்டம் இங்கு செயல்பாட்டிற்கு வந்தமைக்காக மீனவ மக்கள் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்தோடு மீனவ மக்களின் வாழ்வாதாரம் இன்னும் உயரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதே போல் புதிதாக மீன்பிடி இறங்குதளம் நமது மாவட்டத்தில் உள்ள சிப்பிக்குளத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அமையப்பெற்று இன்று அதுவும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த முத்தான மூன்று திட்டங்களையும் மீனவ மக்களுக்காக திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உங்களின் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், தூத்துக்குடி மீன்பிடி துறைமுக திட்டக் கோட்ட செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், மீன்பிடி துறைமுக திட்டக் கோட்டம் உதவி செயற்பொறியாளர் ஜெயசுதா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், மீன்பிடி துறைமுக திட்டக் கோட்டம் உதவிப் பொறியாளர் தயாநிதி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் பெல்சி ஷிபானி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் அக்னிகுமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மீனவ மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட மாணவியருக்கு பாராட்டு விழா
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:21:56 PM (IST)

“உன்னால் முடியும்” தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி: 10ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்பு
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:03:22 PM (IST)

கழுகுமலை கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:58:40 AM (IST)

கோவில்பட்டியில் கடும் போக்குவரத்து நெருக்கடி: பொதுமக்கள் பெரும் அவதி!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:44:09 AM (IST)

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:36:30 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தைப்பூச திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:14:20 AM (IST)
