» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு!

ஞாயிறு 19, ஜனவரி 2025 6:09:57 PM (IST)

கோவில்பட்டியில் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்த சம்பவம் தொடர்பான வழக்கில் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்டதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுகிராமம் பகுதியில் கடந்த 15.01.2025 அன்று இரவு பொங்கல் கலை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 14,16 மற்றும் 17 வயதுடைய 9 சிறுவர்கள் மற்றும் கோவில்பட்டி பழைய அப்பனேரி பகுதியைச் சேர்ந்த ஆறுமுக பாண்டி மகன் சூர்யா (23) ஆகியோர் ஒரு குறிப்பிட்ட பாடலை ஒலிக்கச் சொல்லி கலை நிகழ்ச்சி விழாவில் தகராறு செய்துள்ளனர். 

இதனை கோவில்பட்டி வடக்கு புதுகிராமம் பகுதியைச் சேர்ந்த வேலவன் மகன் கோமதி சங்கர் (24) மற்றும் விழா அமைப்பாளர்கள் சேர்ந்து அவர்களை சத்தம் போட்டு அனுப்பி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மேற்படி சிறுவர்கள் மற்றும் சூர்யா பின்னர் மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அங்கு வந்து கோமதி சங்கரிடம் தகராறு செய்ததுடன் பெட்ரோல் திரியை பற்ற வைத்து அதை மேடை அருகே வீசியுள்ளனர். இதில் ரூபாய் 500 மதிப்புள்ள மேடை அலங்கார பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.

இதுகுறித்து கோமதிசங்கர் அளித்த புகாரியின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு மேற்படி கோமதிசங்கரை மிரட்டியது மற்றும் பெட்ரோல் பாட்டிலை பற்ற வைத்து மேடை அருகே வீசி அலங்காரப் பொருட்களை சேதப்படுத்திய 10 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து அதில் 7 சிறுவர்களை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்திலும் சூர்யாவை கைது செய்தும் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் புகார்தரரான கோமதிசங்கருக்கும் எதிரிகளுக்கும் முன்பின் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் எந்தப் பகையோ முன்விரோதமோ இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த செய்தியை பிரபல தினசரி பத்திரிக்கை ஒன்று மேற்படி வழக்கின் உண்மை தன்மை தெரியாமல் "வாலிபர் மீது பெட்ரோல் குண்டு வீசிய 9 பேர் கைது என பத்திரிக்கை செய்தி வெளியிட்டதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் தூத்துகுடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital





Thoothukudi Business Directory