» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆழ்வார்திருநகரியில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா!

ஞாயிறு 19, ஜனவரி 2025 5:35:45 PM (IST)



ஆழ்வார் திருநகரியில் விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேர்ட்ஸ்தொண்டு நிறுவனம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. 

விழாவில் இளைஞர் தினவிழா, அய்யனார் குதிரை நூல் வெளியிடு மற்றும் சாதனையாளருக்கு விருது வழங்கும் விழா நடந்தது. ஆழ்வார் திருநகரி உடையவர் தெரு யாதவர் ஐந்தாம் திருநாள் பஜனை மடத்தில் நடந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி தலைமை வகித்தார். இராமனூத்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் வேம்பார். மு.க. இப்ராகீம் முன்னிலை வகித்தார்.

பேர்ட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். எழுத்தாளர் இரா.சைலஜா சக்தி எழுதிய அய்யனார் குதிரை எனும் சிறுகதைதொகுதி வெளியிடப்பட்டது. நூலை தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய பொறியாளர் சக்திசுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வெளியிட்டார். ஆழ்வார் குறிச்சி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ச.மாடசாமி என்ற ஆழ்வை ஆயில்யன் நூலை பெற்றுக்கொண்டார். 

நூலாசிரியர் இரா. சைலஜா சக்தி ஏற்புரை வழங்கினார். தொடர்ந்து விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஆழ்வார் திருநகரி மேனாள் இந்து மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டாக்டர் வே. இராமசாமி என்ற ரமேஷ் விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆதிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் காந்திமதி, ஜசக் லூக்கா ஜெபதங்கராஜ், முருகேஸ்வரி, உச்சிமாளி, பெருமாள்குளம் அங்கன்வாடி ஆசிரியை பாக்கியபுஷ்பம், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி அலுவலக உதவியாளர் சுப்பிரமணியன், தென்னக ரயில்வே பணியாளர் முத்துக்குமார், நவலெட்சுமி புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஆறுமுகம், நரசிங்க கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன், குமார சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பாரத், ஆழ்வார்திருநகரி ராமலட்சுமி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் பேச்சு போட்டி, ஓவியப்போட்டி, மாறுவேடப்போட்டி நடந்தது. பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி மற்றும் சிலம்பு போன்ற தற்காற்பு கலை நடத்தி காட்டப்பட்டது. ஆதிநாதபுரம் பள்ளி தலைமை ஆசிரியை சித்திரா, ஆழ்வார் திருநகரி கிளை நூலகர் லட்சுமணக்குமார், நிஷாந் , எழுத்தாளர் சாந்தி , சிலம்பு ஆசான் சண்முகசுந்தரம், வாசகர் வட்ட தலைவர் பிச்சை ராஜா, துணைத்தலைவர் திருமலை உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேர்ட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital







Thoothukudi Business Directory