» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை!

ஞாயிறு 19, ஜனவரி 2025 11:00:28 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 139.80 மிமீ மழை பெய்துள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (19-01-2025) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 139.80 மிமீ மழை பெய்துள்ளது.

மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்)

தூத்துக்குடி 5.20 

திருச்செந்தூர் 1.00 

காயல்பட்டினம் 5.00 

குலசேகரப்பட்டினம் 1.00 

சாத்தான்குளம் 1.40 

கோவில்பட்டி 20.00 

கழுகுமலை 16.00

கயத்தாறு 18.00 

கடம்பூர் 21.00 

எட்டயபுரம் 11.20 

விளாத்திகுளம் 11.00 

காடல்குடி 3.00 

வைப்பார் 2.00 

சூரங்குடி 4.00 

ஓட்டப்பிடாரம் 16.00 

மணியாச்சி 2.00 

வேடநத்தம் 1.00 

கீழஅரசடி 1.00 

மொத்தம் 139.80 

சராசரி மழையளவு 7.36


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory