» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

வெள்ளி 17, ஜனவரி 2025 4:52:47 PM (IST)



தூத்துக்குடியில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் டிவிஏ பிரைட்டர் தலைமையில் மகளிரணி துணைச்செயலாளர் சண்முககுமாரி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களுக்கு கேக் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர், தங்க மாரியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் முனியசாமி, பொதுக்குழு உறுப்பினர், ராமேஸ்வரி, இளைஞர் பாசறை செயலாளர், மருது பாண்டி, சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் இன்னாசி, இளம்பெண்கள் பாசறை செயலாளர் அன்னலட்சுமி, இலக்கிய அணி செயலாளர் வீரபுத்திரன், சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர், தாமஸ் ஜோவர், எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் முத்துமாலை, மாணவரணி தலைவர் அசோக் குமார், அம்மா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் அகஸ்டின், பகுதி செயலாளர்கள் தாவீது, மதன்குமார், முத்துச்செல்வம், பகுதி அவைத்தலைவர்கள் பாஸ்கர், செல்லத்துரை, வட்ட செயலாளர்கள் செல்வராஜ், ரவிக்குமார், பவுல்ராஜ், மோட்சையா, ஐயப்பன், முத்துசாமி, ரொபின்டோ, சேகர், பிஆர்எஸ் பாண்டியன், ஆறுமுகம், நீதிராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory