» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தகராறு செய்து கட்டையால் தாக்கிய 3பேர் கைது!

ஞாயிறு 8, டிசம்பர் 2024 12:09:46 PM (IST)

செய்துங்கநல்லூர் அருகே 2பேரிடம் தகராறு செய்து கட்டையால் தாக்கிய 3பேரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் மூர்த்தி கண்ணன் (48), நடராஜன் மகன் சுகுமார் (55) ஆகிய 2 பேரும் அங்குள்ள கோவில் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது அங்கு வந்த 3பேர் அவர்களிடம் தகராறு செய்து 2 பேரையும் கட்டையால் தாக்கினார்களாம்.

இதில் படுகாயம் அடைந்து 2 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் ஸ்ரீருவைகுண்டம் காவல் நிலைய சப்  இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி ஜான் வழக்குப் பதிந்து, புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் செல்லப்பா (48), ஆறுமுகம் மகன் நாராயணன் (46), தங்கராஜ் மகன் முத்துராஜ் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory