» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி பள்ளியில் ஸ்கோப் திருவிழா
சனி 7, டிசம்பர் 2024 4:01:10 PM (IST)

கோவில்பட்டி விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஸ்கோப் திருவிழாவில் மாணவர்களுக்கு நோக்கு கருவிகளின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு அட்டைகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அஸ்ட்ரோ கிளப்புகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. இதில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் ஸ்டார் பார்ட்டி, நிலா திருவிழா, ஆயிரம் இடங்களில் அஸ்ட்ரானமி, கோள்கள் திருவிழாவை தொடர்ந்து ஸ்கோப் திருவிழாவை 200 இடங்களில் நடத்தி வருகிறது.
முதல் கட்டமாக மாவட்ட அரசு மாதிரி பள்ளி உள்பட 200 இடங்களில் ஸ்கோப் திருவிழாவை நடத்துகிறது. இதில் பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், மைக்ரோஸ்கோப், டெலஸ்கோப், ஸ்டெதோஸ்கோப், ஸ்டீரியோஸ்கோப், போல்டோஸ்கோப், உள்ளிட்ட நோக்கு கருவிகளின் அறிவியல் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சியுடன் விழிப்புணர்வு அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
கோவில்பட்டி விஸ்வர்மா உயர்நிலைப்பள்ளியில் நடந்த ஸ்கோப் திருவிழாவில் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை அறிவியல் விளக்கங்களை புரிய வைக்கும் வகையில் நோக்கு கருவிகளின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு அட்டைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்குவிஸ்வகர்மா மகாஜன சங்க செயலாளர் காளியப்பன் தலைமை வகித்தார், ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன், பள்ளி தலைமை ஆசிரியை கார்த்திஸ்வரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆசிரியை கஸ்தூரி அனைவரையும் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நோக்கு கருவிகளின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு அட்டைகளை வழங்கி பேசினார். இதில் பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா : நலதிட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:21:27 PM (IST)

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)

வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு: தூய்மை பாரத ஓட்டுநர் பணியாளர் நலச்சங்கம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:04:55 PM (IST)

தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணி: ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் ஆய்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 7:58:34 PM (IST)

மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வழங்கப்படும் : ஆட்சியர்
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:26:25 PM (IST)
