» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடிநீர் தொட்டி பள்ளத்தில் தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து: தூத்துக்குடியில் பரபரப்பு
வியாழன் 5, டிசம்பர் 2024 5:04:48 PM (IST)

தூத்துக்குடியில் குடிநீர் தொட்டி பள்ளத்தில் தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தூத்துக்குடி மாநகராட்சி 45 வது வார்டு பிரையன்ட் நகர் 11 வது தெரு மேற்கு கட்டபொம்மன் நகர் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு தொட்டி மூடி அமைக்காமல் இருந்துள்ளது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம், மற்றும் மண்டலம் வாரியாக நடைபெற கூடிய மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், இன்று குடிநீர் ஏற்றி வந்த தனியார் வாகனம் நிலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க குடிநீர் தொட்டிக்கு தரமான மூடி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக தண்ணீர் லாரியில் இருந்து வீணாக வெளிவரும் நீரில் பொதுமக்கள் உற்சாகம் குளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!
வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)

ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சம் நிதியுதவி!
வியாழன் 19, ஜூன் 2025 12:34:23 PM (IST)

தூத்துக்குடியில் ஐடி கம்பெனி அதிபரிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!
வியாழன் 19, ஜூன் 2025 12:09:56 PM (IST)

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்
வியாழன் 19, ஜூன் 2025 11:50:55 AM (IST)

தூத்துக்குடியில் கோவில், பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை!
வியாழன் 19, ஜூன் 2025 10:49:32 AM (IST)

நூறு அடி உயர மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்!
வியாழன் 19, ஜூன் 2025 10:37:54 AM (IST)
