» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஒரு மணி நேரத்தில் 23 திருமணங்கள்!

வியாழன் 5, டிசம்பர் 2024 12:56:25 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் இன்று (டிச.5) காலை ஒரு மணி நேரத்தில் 23 திருமணங்கள் நடைபெற்றன.
 
2024 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் கடைசி சுபமுகூர்த்த நாளான இன்று ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு  சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் இன்று ஒரு மணி நேரத்தில் 23 திருமணங்கள் நடைபெற்றன.

சங்கர ராமேஸ்வர் சன்னதிக்கு பின்புறத்தில் உள்ள வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கும் சுப்பிரமணிய சுவாமி சன்னதி முன்பு 23 திருமணங்கள் நடைபெற்றன. திருமணங்களை கோவில் பிரதான பட்டர் குரு நடத்தி வைத்தார். திருமண வீட்டார்களின் கூட்டத்தால், கோவிலில் மக்கள் வெள்ளம் நிறைந்து காணப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory