» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது கார் மோதிய விபத்தில் பீகார் வாலிபர் பலி
வியாழன் 5, டிசம்பர் 2024 12:51:40 PM (IST)
தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பீகார் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தாதன் கிரி மகன் நித்துகிரி (27), இவர் தூத்துக்குடி அருகே உள்ள எப்போதுவென்றான் பகுதியில் உள்ள ரைஸ் மில்லில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து தான் தங்கி இருக்கும் இடத்திற்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலை ரோடு பசுவந்தனை விலக்கு ரோட்டில் செல்லும்போது எதிரே வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேம்பட்ட சிஎன்சி பயிற்சி பெற்ற பயிற்றுனர்களுக்கு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
சனி 14, ஜூன் 2025 8:18:23 PM (IST)

பிட்னஸ் சேலஞ்ச்: சார்பு ஆய்வாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்!
சனி 14, ஜூன் 2025 5:46:52 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய பொறியாளர் இறந்த வழக்கில் ரூ.1.30கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
சனி 14, ஜூன் 2025 4:31:56 PM (IST)

நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலம்: ஆட்சியர் க.இளம்பகவத் திறந்து வைத்தார்!
சனி 14, ஜூன் 2025 3:30:30 PM (IST)

தூத்துக்குடியில் உலக குருதிக் கொடையாளர் தினம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!
சனி 14, ஜூன் 2025 12:03:07 PM (IST)

பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க கனிமொழி எம்பி நடவடிக்கை: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
சனி 14, ஜூன் 2025 11:53:18 AM (IST)
