» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருநெல்வேலியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் : ஆட்சியர் கார்த்திகேயன் ஆய்வு!

வெள்ளி 29, நவம்பர் 2024 12:51:45 PM (IST)



‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தன் கீழ் திருநெல்வேலி வட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் திருநெல்வேலி வட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் என்.ஓ.சுகபுத்ரா, மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் இன்று (28.11.2024) ஆய்வு மேற்கொண்டார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தும் பொருட்டு, ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் முகாம் இராதாபுரம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, மானூர், சேரன்மகாதேவி, திசையன்விளை மற்றும் பாளையங்கோட்டை வட்டத்தில் நடைபெற்றது. இன்றையதினம், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தில் திருநெல்வேலி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் சென்று, ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் திருநெல்வேலி புறவழிச்சாலை ரூ.51 கோடி மதிப்பில் உடையார்பட்டி முதல் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வரை நான்கு வழிச்சாலையாக சாலையினை அகலப்படுத்தி தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலை உடையார்பட்டி மணி மூர்த்தீஸ்வரம் சீவலப்பேரி பிரிவு சாலையில் ரவுண்டானா அமைத்து சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தொடர்ந்து, திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் ரூ.660 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் பழையபேட்டை சுந்தர விநாயகர் கோவில் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதையும், ரூ.14.67 கோடி மதிப்பில் பழையபேட்டை பகுதியில் அமைக்கப்பட்ட கனரக வாகன முனையம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாகவும், பம்பன்குளத்தில் நடைபாதை மற்றும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் இன்றையதினம் பேட்டை, பாலாமடை, திருப்பணிகரிசல்குளம், கங்கைகொண்டான், கொண்டாநகரம், மேலக்கல்லூர், சங்கர் நகர், நாரணம்மாள்புரம், சங்கன்திரடு, சுத்தமல்லி, வெள்ளாளங்குளம், சீதபற்பநல்லூர், அலங்காரபேரி, இராமயன்பட்டி, இராஜவல்லிபுரம், தென்பத்து, நரசிங்கநல்லூர், கோடகல்லூர், துலுக்கர்குளம், பழவூர், குப்பக்குறிச்சி, கருங்காடு, புதூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடர்பான அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் இன்றைய ஆய்வுகள் குறித்தும், பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, திட்ட இயக்குநர்கள் சரவணன் (ஊரக வளர்ச்சி முகமை), இலக்குவன் (மகளிர் திட்டம்), மண்டல தலைவர் மகேஷ்வரி, உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.அம்பிகா ஜெயின், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, திருநெல்வேலி மண்டல ஆணையாளர் நாராயணன், உதவி கோட்டப் பொறியாளர் சண்முகநாதன், திருநெல்வேலி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory