» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சமையல் எரிவாயு சிலிண்டர் திருட்டு: பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை!!
வியாழன் 28, நவம்பர் 2024 5:30:52 PM (IST)
தூத்துக்குடியில் பட்டப்பகலில் வாகனத்தில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் நேற்று பகலில் தனியார் சமையல் எரிவாயு சிலிண்டர் நிறுவனம் சார்பில் அந்தப் பகுதியில் ஒரு வீட்டிற்கு சிலிண்டர் விநியோகம் செய்வதற்காக சிலிண்டர் கொண்டு வந்த சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு சிலிண்டர் டெலிவரி செய்ய உள்ளே சென்றனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சமையல் எரிவாயு இருந்த வாகனத்தில் ஊழியர் இல்லாததை தெரிந்து கொண்டு சரக்கு வாகனத்தில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வடபாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.