» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாலம் பணிகளை நிறுத்த வலியுறுத்தி சாலை மறியல் : தூத்துக்குடியில் பரபரப்பு!

புதன் 27, நவம்பர் 2024 12:28:45 PM (IST)



தூத்துக்குடி தெற்கு சோட்டையன்தோப்பு பகுதியில் பாலம் கட்டும் பணிகளை நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ளது சோட்டையன் தோப்பு, ஆரோக்கியபுரம், ஆ.சண்முகபுரம், ஆகிய பகுதிகள் இந்நிலையில் இந்த பகுதிகளை பாதிக்கும் வகையில் தூத்துக்குடி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சொட்டையன் தோப்பு பகுதி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பாலம் அமைத்தால் தங்கள் பகுதியில் மழைக்காலங்களில் மழை நீர் கிராமங்களுக்குள் எளிதாக புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும் எனவே இந்த பாலத்தை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதி பொதுமக்கள் ஏற்கனவே மாப்பிளையூரனி பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

ஆனால் அந்த பாலப்பணியை நிறுத்த நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று தூத்துக்குடி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் பாலப் பணியை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர.

இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் தாளமுத்து நகர் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை கலைத்தனர். இந்த பாலத்தை கட்டும் பணியை உடனடியாக நிறுத்தாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

பட்டுராஜன்Nov 27, 2024 - 12:38:06 PM | Posted IP 172.7*****

பாலம் கட்டுவது நல்லது தானே இதுக்கு எதுக்கு மறியல்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education

New Shape Tailors




Thoothukudi Business Directory