» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டிட பணி : முதல்வர் தொடங்கி வைத்தார்!
புதன் 13, நவம்பர் 2024 7:53:15 PM (IST)
தூத்துக்குடியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக கட்டிடம் அமைக்கும் பணியை முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக கட்டிடம் ரூ. 3 மோடி மதிப்பீட்டில் அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியதை முன்னிட்டு, தூத்துக்குடியில் நடந்த விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.
விழாவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, வைகுண்டபதி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.