» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க் சந்திப்பில் வேகத்தடை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நன்றி
புதன் 13, நவம்பர் 2024 5:54:22 PM (IST)
தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க் சந்திப்பில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
தொடர் விபத்துக்கள் உயிர் பலிகளை தடுத்திட முத்தையாபுரம் பல்க் சந்திப்பில் வேகத்தடை அமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி & பொதுமக்கள் சார்பில் 27.09.2024 அன்று நடைபெற இருந்த மறியல் போராட்டம் அறிவிப்பினை தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தின் முடிவின்படி முத்தையாபுரம் பல்க் பஜாரில் வேகத்தடை அமைக்க ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி மேயர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை அதிகாரிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் குழு நன்றி தெரிவித்துள்ளது.