» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் பகுதிகளில் நவ.14ல் மின்தடை அறிவிப்பு

புதன் 13, நவம்பர் 2024 5:26:09 PM (IST)

திருச்செந்தூர் பகுதிகளில் நாளை (நவ.14) வியாழக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருச்செந்தூா் மின்விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு "திருச்செந்தூா் கோட்டத்திற்கு உள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் உபமின் நிலையங்களில் நாளை (நவ.14) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஆகவே, புன்னக்காயல், ஆத்தூா், சோ்ந்தபூமங்கலம், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி , காந்திபுரம், கிருஷ்ணா நகா், திருச்செந்தூா், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணாநகா், குறிஞ்சிநகா், அமலிநகா், தோப்பூா், திருச்செந்தூா் - காயல்பட்டணம் ரோடு. பிடிஆா் நகா், பாளை ரோடு, ஜெயந்தி நகா், ராமசாமிபுரம், அன்பு நகா், கானம், 

வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிகாடு, வள்ளிவிளை கானம் கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, மாவடிபண்ணை, குரங்கணி, குளத்துக்குடியிருப்பு, மயிலோடை, கோட்டூா், குருகாட்டூா், புறையூா், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், நாலுமாவடி, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors





Thoothukudi Business Directory