» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன் வலை பின்னும் கூடம் கடலில் மூழ்கியது : மீனவர்கள் அதிர்ச்சி!
புதன் 13, நவம்பர் 2024 4:00:18 PM (IST)
தூத்துக்குடியில் கடல் அரிப்பு காரணமாக ரூ.12.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மீன் வலை பின்னும் கூடம் கடலில் மூழ்கியது.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் ரூ.12.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மீன் வலை பின்னும் கூடம் கடல் அரிப்பு காரணமாக கடலில் மூழ்கியது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மீன் வலை பின்னும் கூடத்தை சீரமைக்கவும், இப்பகுதியில் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருவைக்குளம் மீனவ மக்கள் கோரிக்கை விடுள்ளனர்.