» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கின்ஸ் அகாடமியில் அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா!
செவ்வாய் 12, நவம்பர் 2024 8:32:03 PM (IST)
தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் பயின்று பல்வேறு அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி போல்பேட்டையில் அமைந்து இருக்கும் கின்ஸ் அகாடமி கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. டின்பிஎஸ்சி, தமிழ்நாடு போலிஸ், வங்கி தேர்வுகள், எஸ்எஸ்சி தேர்வுகள், இரயில்வே தேர்வுகள் மற்றும் யுபிஎஸ்சி தேர்வுகள் ஆகிய தேர்வுகளுக்கு இங்கு முற்றிலும் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு படித்த மாணவர்கள் பல்வேற அரசு தேர்வுகளில் வெற்றி பெற்று தமிழகம் முழுவதும் அரசு பணியில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த ஆண்டு நடந்த டின்பிஎஸ்சி மற்றும் டிஎன்யுஎஸ்ஆர்பி முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. இதில் எங்களது கின்ஸ் அகாடமியில் பயின்ற 71 மாணவ மாணவியர் வெற்றி பெற்று அரசு பணியிடம் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கான பாராட்டுவிழா நேற்று கின்ஸ் அகடாமியில் நடந்தது. இந்த விழாவில் கின்ஸ் அகாடமி நிறுவனர் எஸ். பேச்சிமுத்து வரவேற்றார். மதுரை கணேசா குரூப்ஸ் சேர்மன் கே.மோகன் தலைமை ஏற்றார்.
கைத்தறி ஆய்வாளர் டி.ரகு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டுறவு துணை பதிவாளர் (ஓய்வு) மு.முத்துசாமி, ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி பேராசியர் இ. வாசுகி, செயின் மேரிஸ் கல்லூரி பேராசிரியர் சோனல், கின்ஸ் அகாடமி ஆங்கில பயிற்றுனர் அன்டனி அபித் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர். டின்பிஎஸ்சி வெற்றியாளர் பி. விஜயகுமார் நன்றி கூறினார்.
சிறப்பு விருந்தினர் டி. ரகு பேசியதாவது: நமது கின்ஸ் அகாடமியில் தமிழக காவல்துறை தேர்வு முதல் யுபிஎஸ்சி தேர்வு வரை பல்வேறு தேர்வுகளுக்கான பயிற்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வங்கிபணி மற்றும் ரயில்வே பணிக்கான தேர்வுகளுக்கும் இங்கு சிறப்பாக பயிற்சிகள் நடைபெறுகிறது. மிகவும் ஏழ்மையில் உள்ள மாணவிகளுக்கும், மாணவர்களுக்கும் தனித்தனியே கட்டணமில்லா ஹாஸ்டல் வசதிகளும் இருக்கிறது இவை தவிர இங்கு மதிய உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆகவே மாணவர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு ஏற்ற பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். வெற்றி பெற்ற இந்த 71 மாணவர்களும் இந்த சமுதாயத்திற்கு எப்போதும் உதவியாக இருக்க வேண்டும். வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்களும் தோல்வி குறித்து கவலை பட வேண்டாம். தோல்வி என்பது வெற்றியின் முதல் படி. ஆகவே, தொடர்ந்து படித்து வந்தால் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற முடியும். இவ்வாறு டி.ரகு பேசினார்.
nanum oruvanNov 13, 2024 - 10:30:08 AM | Posted IP 162.1*****