» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வக்ப் வாரிய திருத்த மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் 12, நவம்பர் 2024 5:16:29 PM (IST)



வக்ப் வாரிய திருத்த மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் செய்துங்கநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வக்ப் வாரிய திருத்த மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து செய்துங்கநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட தலைவர் நவாஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இம்ரான், பொருளாளர் ரஷீத்காமில், துணைத்தலைவர் தமீம்அன்சாரி, துணை செயலாளர்கள் இமாம்பரீது, அசாருதீன், சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திருப்பபெற வலியுறுத்தி பேசியதாவது, வக்ப் வாரிய திருத்த சட்டம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு தர்மமாக வழங்கப்பட்டுள்ள நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது கண்டனத்திற்குரியதாகும். வக்ப் வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறும்வரை எங்களது போராட்டங்களும் தொடரும் என்றார்.

இதில், மாவட்ட மாணவரணி செயலாளர் யாசர்அராபத், வர்த்தக அணி செயலாளர் சிக்கந்தர் மீரான், செய்துங்கநல்லூர் கிளை தலைவர் சாதிக், செயலாளர் அப்துல்காதர், பொருளாளர் கரீம்பாட்ஷா, துணைத்தலைவர் வாசிம், துணைச்செயலாளர் அப்துல்கனி, மருத்துவ அணி சையதுஇப்ராஹிம், மாணவரணி நவ்பல், தொண்டரணி ஹம்ஸா, வர்த்தக அணி ஆபிதீன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

நேருNov 12, 2024 - 06:04:52 PM | Posted IP 162.1*****

இஸ்லாம் இந்தியாவில் தோன்றிய மதமா ?

மகாத்மா காந்திNov 12, 2024 - 05:57:13 PM | Posted IP 162.1*****

உங்களுக்கு பாகிஸ்தான் ஒரு நாடே கொடுத்தாச்சு, எதுக்கு இந்த நாடு கேக்குதோ. இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றவா ??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory