» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனல்மின் நிலைய பொறியாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
செவ்வாய் 12, நவம்பர் 2024 4:53:46 PM (IST)
நாகர்கோவில் அருகே, தூத்துக்குடி அனல்மின் நிலைய பொறியாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கேசரி தெருவைச் சேர்ந்தவர் ஹெரால்டு அருள்குமார். இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் செயற்பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் வருமானவரித் துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.