» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளியின் முதல்வர் உட்பட 2பேர் கைது!
செவ்வாய் 12, நவம்பர் 2024 10:30:15 AM (IST)
உடன்குடியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் உடற்கல்வி ஆசிரியரை தொடர்ந்து பள்ளியின் முதல்வர் உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மாணவிகள் பாதிக்கபட்ட சம்பவத்தை காவல்துறையினருக்கு புகார் அளிக்காமல் மறைக்க முயன்ற பள்ளியின் முதல்வர், செயலாளர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்ற இடத்தில் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும்,
மேலும் அந்த தனியார் பள்ளி நிர்வாகம் இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்காமல் மறைப்பதாகவும் வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி சம்பவம் உண்மை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான உடன்குடி கிறிஸ்டியானகரம் பகுதியைச் சேர்ந்த பொன்சிங் (42) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பள்ளி மாணவிகள் பாதிக்கப்பட்ட சம்பவத்தை காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்காமல் மறைக்க முயன்ற பள்ளியின் முதல்வர் மற்றும் பள்ளியின் செயலாளர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)

peyar illatha palliya?Nov 12, 2024 - 01:23:56 PM | Posted IP 172.7*****