» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்!
ஞாயிறு 10, நவம்பர் 2024 12:23:06 PM (IST)
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.60லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மரைன் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் நேற்று இரவு முத்தையாபுரம் கோவளம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கோவளம் கடற்கரை ஒட்டி உள்ள பாலத்துக்கு கீழே பீடி பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
அதனை பிரித்து பார்த்தபோது, தலா 30 கிலோ வீதம் 65 பீடி பண்டல்களில் சுமார் 2000 கிலோ பீடி இலைகள் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். இந்த பீடி இலைகளை சட்ட விரோதமாக மர்ம நபர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் கொண்டு வந்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதை கடத்தி வந்தவர்கள் யார் என்பதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.