» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.1லட்சம் மதிப்புள்ள சங்குகள் திருட்டு : 2பேர் கைது!
ஞாயிறு 10, நவம்பர் 2024 12:16:59 PM (IST)
தூத்துக்குடியில் சங்கு விற்பனை நிறுவனத்தில் ரூ.1லட்சம் மதிப்புள்ள சங்குகளை திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் பக்கீர் மகன் காஜா மொய்தீன் (55), இவர் அந்த பகுதியில் சங்கு கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கம்பெனியில் உள்ள ஷட்டரில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த 58 சங்குகளை திருடுபோயிருந்தது. இதன் மதிப்பு ரூ.1லட்சம் ஆகும்.
இந்த சம்பவம் குறித்து அவர் வடபாகம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி தூத்துக்குடி கோவில் பிள்ளை விளையைச் சேர்ந்த பிரிட்டோ மகன் சிலுவை (24), ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த நீஜெலன் மகன் ஜெனிசன் (20) ஆகிய 2 பேரையும் கைது செய்து செய்தார். அவர்களிடம் இருந்து 58 சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.