» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது லாரி மோதி ஐடிஐ மாணவர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!
ஞாயிறு 10, நவம்பர் 2024 9:36:54 AM (IST)
தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஐடிஐ மாணவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் மகேந்திரன் (21). இவர் தூத்துக்குடியில் உள்ள ஐடிஐயில் படித்து வருகிறார். இவர் நேற்று மாலை தூத்துக்குடியில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் இருந்த பேரிகார்டை கடக்க முயன்றபோது, பின்னால் தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு லாரி பைக் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சைரஸ் மற்றும் போலீசார், மகேந்திரனின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.