» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குறைவான மீன்களுடன் கரை திரும்பிய நாட்டுப்படகு மீனவர்கள்: விலை இல்லாததால் கவலை!

ஞாயிறு 10, நவம்பர் 2024 9:08:26 AM (IST)

தூத்துக்குடியில் நேற்று மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் குறைவான மீன்களுடன் கரை திரும்பினர். மேலும் மீன்களுக்கு போதிய விலை இல்லாததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அதிகாலையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று விட்டு சுமார் காலை 9 மணியளவில் கரைக்கு திரும்புவர்.

இவர்களின் வலையில் அதிகளவு சாளை மற்றும் சூடை, பாறை, விளைமீன் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கும். இவர்கள் கடல் பகுதியில் குறைவான தூரத்தில் சென்று மீன்கள் பிடித்து வருவதால் மீன்களை ஐஸ் வைத்து பதப்படுத்தாமல் உடனடியாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கடற்கரையிலேயே விற்பனை செய்கின்றனர்.

எனவே புதிய துறைமுக கடற்கரை பகுதியில் கிடைக்கும் மீன்கள் புதிதாக இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவு விரும்பி வந்து இந்த மீன்களை வாங்கி செல்கின்றனர். இந்த பகுதி மீனவர்களுக்கு வழக்கமாக சுமார் 2 டன் வரை மீன்கள் கிடைக்கும். ஆனால் தற்போது கடல் பகுதியில் பெய்து வரும் மழை மற்றும் வானிலை மாற்றம் காரணமாக குறைந்த அளவு மீன்களே இவர்களுக்கு கிடைத்து வருகிறது. 

இவ்வாறு கிடைக்கும் மீன்களை வாங்க அதிகமான வியாபாரிகள் வராத காரணத்தினாலும், கடந்த ஒரு வார காலமாக கந்தசஷ்டி திருவிழா காரணமாகவும் மீன்களுக்கு நல்ல விலை இல்லாத நிலை இருந்து வருகிறது. இதனால் இங்குள்ள மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களை, மீன் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், கருவாடு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று ஒரு கிலோ சாளை மீன் மற்றும் சூடை மீன்கள் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. மீன்களுக்கு விலை கிடைக்காததால் ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்து உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இன்னும் ஒரு வார காலத்திற்கு பின்னர் தங்களுக்கு அதிக அளவு மீன்களும், அதற்கு நல்ல விலையும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory