» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு!
திங்கள் 4, நவம்பர் 2024 8:43:10 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டிஐஜி மூர்த்தி ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா நவ.2ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வருகின்ற 07.11.2024 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 08.11.2024 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது.
மேற்படி கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பா. மூர்த்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் திருச்செந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு நேரில் சென்று சூரசம்ஹாரம் நடைபெறும் இடம், வாகனம் நிறுத்துமிடம் மற்றும் பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.