» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊராட்சித் தலைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
திங்கள் 4, நவம்பர் 2024 8:33:28 AM (IST)
கோவில்பட்டி அருகே ஊராட்சித் தலைவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பீக்கிலிபட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த வீரபெருமாள் மகன் முருகேசன் (54). இவர் பீக்கிலிப்பட்டி ஊராட்சித் தலைவராகவும், திமுக மத்திய ஒன்றியச் செயலராகவும் உள்ளார்.
சம்பவத்தன்று இரவு, இவர் குடியிருக்கும் தெரு வழியாக அதே ஊரைச் சேர்ந்த வேலு மகன் முனியசாமி (55) பைக்கில் சென்றார். அப்போது, ஜல்லிக்கற்கள் மீது பைக் ஏறியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். பின்னர், அவர் ஊராட்சித் தலைவரின் வீட்டைப் பார்த்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக முருகேசன் கேட்டபோது, அவரை முனியசாமி அவதூறாகப் பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து, முனியசாமியை கைது செய்தனர்.