» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாய நிலப் பகுதியில் திரிந்த ஒட்டகம்: கோவில்பட்டி அருகே பரபரப்பு!

வெள்ளி 1, நவம்பர் 2024 9:33:29 PM (IST)



கோவில்பட்டி அருகே வில்லிசேரி பகுதியில் விவசாய நிலப் பகுதியில் சுற்றி திரிந்த ஒட்டகத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விவசாய நிலங்கள் பகுதியில் இன்று காலையில் ஒரு ஒட்டகம் ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்துள்ளனர். மக்கள் கூட்டம் கூடியது, அங்கிருந்து ஒட்டகம் ஓட்டம் பிடித்து காட்டு பகுதிக்குள் சென்று விட்டதாக தெரிகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனத்துறையினரும், தேடி பார்த்தும் ஒட்டகம் சிக்கவில்லை. ஒட்டகம் இப்பகுதிக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory