» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் தங்கத்தேர் உலா : கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

வெள்ளி 1, நவம்பர் 2024 5:41:49 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (சனிக்கிழமை) முதல் நவ.6ம் தேதி வரை தங்கத்தேர் உலா நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் மாலை 6 மணியளவில் தங்கத்தேர் கிரிப்பிரகாரம் சுற்றி வருவது வழக்கமாகும். தேரில் வள்ளி, தேவசேனா அம்மனுடன் எழுந்தருளியிருக்கும் சுவாமி ஜெயந்திநாதரை பக்தர்கள் ரூ.2,500 கட்டணத்தில் முன்பதிவு செய்து தேர் இழுத்து வேண்டுதலை நிறைவேற்றுவர்.

தற்போது கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பெருந்திட்ட வளாகப் பணிகளில் கோயிலின் வடக்கு மற்றும் கிழக்கு பிரகார தரைத்தள பணிகள் நடைபெறுவதற்காக கடந்த ஜூலை 17ம் தேதி முதல் தங்கத்தேர் உலா ரத்து செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடந்தது. இந்நிலையில் பிரசித்திப் பெற்ற கந்தசஷ்டி விழா, நாளை (நவ.2) தொடங்கி நவ.7ம் தேதி சூரசம்ஹாரமும், 8ம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு நாளை நவ.2ம் தேதி முதல் 5ம் திருவிழாவான நவ.6ம் தேதி வரை தினசரி மாலை கிரி பிரகாரத்தில் தங்கத்தேர் உலா நடைபெறும் என்றும் அதன் பிறகு பணிகளை பொறுத்து தங்கத்தேர் உலா மீண்டும் தொடங்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory