» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் அருகே சாலை பணி : மேயர் ஆய்வு!
வெள்ளி 1, நவம்பர் 2024 5:09:41 PM (IST)
தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் புதிய சாலை மற்றும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு உள்ளே செல்லும் வழியில் நடைபெற்று வரும் புதிய சாலை மற்றும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.