» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரயில்களை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை

புதன் 30, அக்டோபர் 2024 3:24:02 PM (IST)

தூத்துக்குடி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்களை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி - செங்கோட்டை, மற்றும் தூத்துக்குடி - மதுரை சிறப்பு  ரயில்கள் இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் செயலாளர் மா. பிரமநாயகம் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு: தீபாவளி பண்டிகைக்கு தூத்துக்குடி - சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கியமைக்கு எங்கள் பயணிகள் நல சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த தூத்துக்குடி தாம்பரம் ரயிலை திங்கள் தோறும் தூத்துக்குடி தாம்பரம் இடையேயும் செவ்வாய் தோறும் தாம்பரம் தூத்துக்குடி இடையேயும் பொங்கல் பண்டிகை வரை இயக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தாம்பரம்-தூத்துக்குடி ரயிலை மாலையில் 5 மணிக்கு புறப்பட செய்யுமாறு நேரத்தை மாற்றிக் கொடுக்கும் படியும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வண்டி எண். 06667-06668 திருநெல்வேலி- தூத்துக்குடி, தூத்துக்குடி- திருநெல்வேலி பயணிகள் ரயில் காலை 09-30 மணி முதல் மாலை 6:25 மணி வரை தூத்துக்குடியில் பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த ரயிலின் கோச்சுகளை வைத்து தூத்துக்குடி-மதுரை இடையே காலையிலும், மதுரை- தூத்துக்குடி இடையே மதிய நேரத்திலும் சிறப்பு ரயிலாக இயக்கினால் தூத்துக்குடி பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், காலையில் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு நேரடி ரயில் கிடையாது. அதை தவிர்க்கும் பொருட்டு, இந்த தூத்துக்குடி - மதுரை காலையில் ரயில் இயக்கினால், தூத்துக்குடி மாநகர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அப்படி மதுரைக்கு வாய்ப்பு இல்லை என்றால் தூத்துக்குடி- தூத்துக்குடி மேலூர் திருநெல்வேலி- தென்காசி- செங்கோட்டைக்கு வாஞ்சி மணியாச்சி பைபாஸ் வழியாக சிறப்பு ரயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

கண்ணன் . pNov 7, 2024 - 12:48:01 AM | Posted IP 162.1*****

வாய்ப்பு இல்ல ராசா அதற்கு நீ தேர்ந்தெடுத்தத MP சரி இல்ல ராசா

RajaNov 2, 2024 - 08:28:25 PM | Posted IP 162.1*****

தமிழ் நாட்டில் இருந்து ஷிரடிக்கு வாரத்திற்கு ஒரு ரயில் மட்டுமே ஆனால் கர்நாடகத்தில் இருந்து ஷிரடிக்கு வாரத்திற்கு 11ரயில் இயங்குகிறது எனவே சாய்பாபா பக்தர்களை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்

RajanNov 1, 2024 - 02:48:28 PM | Posted IP 162.1*****

We needed additional train for day time ⏲️

RajanNov 1, 2024 - 01:58:32 PM | Posted IP 172.7*****

S we needed additional Train for day time

BhaskaranOct 31, 2024 - 01:51:28 PM | Posted IP 172.7*****

இவர் மட்டும் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தாள் இறால் எம்.பி மந்திரிகள் என்ன செய்யறாங்க

Sakthivel @ TuticorinOct 31, 2024 - 10:00:25 AM | Posted IP 172.7*****

Expections for this train service Change time table and regularly via Karaikudi , Thanjavur, Kumbakonam up to Chennai Egmore , Rack Shareing with Tuticorin - Mettuppalam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory