» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேவர் ஜெயந்தி விழா: காங்கிரஸ் சார்பில் மரியாதை!
புதன் 30, அக்டோபர் 2024 12:24:43 PM (IST)
தூத்துக்குடியில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி 3 வது மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் கே.பெருமாள்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வடக்கு மண்டல தலைவர் சேகர், கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, டிசிடியூ மாநில செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி மாநகர செயலாளர் இக்னேசியஸ் மாநகரச் செயலாளர் கோபால், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், எஸ்சி/எஸ்டி முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பிரதீப் தினகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு, கண்ணன் ஐஎன்டியூசி சேகர், சுரேஷ்குமார், தையல் மனோகரன், ரூஸ்வெல்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.