» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குமாரபுரத்தில் ரூ.30.57 கோடியில் குடியிருப்பு கட்டிடம் : முதல்வர் திறந்து வைத்தார்!

செவ்வாய் 29, அக்டோபர் 2024 5:32:58 PM (IST)



ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் பகுதியில் ரூ.30.57 கோடி மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்பு கட்டிடத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக குமாரபுரம் பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தினை திறந்து வைத்ததைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் இன்று (29.10.2024) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, குத்துவிளக்கேற்றி தெரிவிக்கையில்-

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம், குமாரபுரம் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டம் மற்றும் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் பிரிவின் கீழ் திட்டப்பகுதி 288 (G.3) அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.30.57 கோடி செலவில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டப்பகுதியில் 9 தொகுப்புகளாக (ஒவ்வொரு பிளாக்கிலும் 32 வீடுகள்) ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடி கட்டுமானப்பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை குளியலறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஒரு குடியிருப்பிற்கான மதிப்பீடு ரூ.10.61 இலட்சம் ஆகும். இதில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.1.50 இலட்சமும் மாநில அரசின் பங்களிப்பாக ரூ.7 இலட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.2.11 இலட்சம் பயனாளிகளிடமிருந்து பயனாளி பங்களிப்பு தொகையாக பெறப்படுகிறது.

இத்திட்டப்பகுதியில் தார் சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதி, கழிவுநீரகற்று வசதி, மழைநீர் வடிகால், மழைநீர் சேமிப்பு முறைகள் மற்றும் நிழல் தரும் மரங்கள் போன்ற அடிப்படை மேம்பாட்டு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு நலச் சங்கம் அமைக்கப்பட்டு குடியிருப்புகளை நன்முறையில் பராமரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய வீடற்ற குடும்பங்களுக்கு இக்குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும். குறிப்பாக தோவாளை வட்டத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அத்தோடு நாகர்கோவில் மாநகராட்சி, அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். 

பயனாளிகள் தகுந்த விண்ணப்பத்துடன் வரும் நவம்பர் 10க்குள் கன்னியாகுமரி மாவட்டம்- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தினை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன். விண்ணப்பித்த அனைவருக்கும் குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்டஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் குமாரபுரம் குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்கள். நிகழ்ச்சியில் குடிசை மாற்றுவாரிய செயற்பொறியாளர் ராஜகோபால், தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory