» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புகையிலைப் பொருட்கள் பதுக்கிய 5 பேர் கைது : 150 கிலோ பறிமுதல்!
வியாழன் 10, அக்டோபர் 2024 8:14:22 PM (IST)
சாத்தான்குளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்ததாக 5 பேரை போலீசார் கைது செய்து 150 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், தட்டார்மடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தட்டார்மடம் எஸ்ஐ பொன்னு முனியசாமி தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொழுந்தட்டு தனியார் பள்ளி அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் வந்த 4 பேர்கள் போலீசை கண்டதும் தலைமறைவானர்.
அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் பள்ளக்குறிச்சியை சேர்ந்த சண்முக ஆனந்தம் மகன் சதீஷ் (32), கொழுந்தட்டு சிலுவை அந்தோணி மகன் அருள் அன்பு ராஜா (40), வல்லக்குளம் பொன்சென்ட் மகன் லெனின் (27), சாலைப்புதூர் லிங்க பூபதி மகன் சுப்பையா (42) ஆகியோர் என தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 125 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சாத்தான்குளம் எஸ்ஐ சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது பெரியதாழை காட்டுப்பகுதியில் நின்ற இருவர் போலீஸை கண்டாலும் ஓடினர். அதில் ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் சாத்தான்குளம் சேர்ந்த தங்கசாமி மகன் செல்வசேகர் (41) என தெரிய வந்தது.
இதனை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 30 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய அவரது சகோதரர் திசையன்விளையைச் சேர்ந்த ராஜலிங்கம் என்பவரை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேம்பட்ட சிஎன்சி பயிற்சி பெற்ற பயிற்றுனர்களுக்கு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
சனி 14, ஜூன் 2025 8:18:23 PM (IST)

பிட்னஸ் சேலஞ்ச்: சார்பு ஆய்வாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்!
சனி 14, ஜூன் 2025 5:46:52 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய பொறியாளர் இறந்த வழக்கில் ரூ.1.30கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
சனி 14, ஜூன் 2025 4:31:56 PM (IST)

நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலம்: ஆட்சியர் க.இளம்பகவத் திறந்து வைத்தார்!
சனி 14, ஜூன் 2025 3:30:30 PM (IST)

தூத்துக்குடியில் உலக குருதிக் கொடையாளர் தினம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!
சனி 14, ஜூன் 2025 12:03:07 PM (IST)

பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க கனிமொழி எம்பி நடவடிக்கை: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
சனி 14, ஜூன் 2025 11:53:18 AM (IST)
