» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளத்தில் இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா!

வியாழன் 10, அக்டோபர் 2024 7:44:45 PM (IST)



விளாத்திகுளத்தில் தேவேந்திர குலவேளாளர் நலச்சங்கம் சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 100 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. 

ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக போராடிய சமூக நீதிப் போராளி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 100 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப்படத்திற்கு தேவேந்திர குல வேளாளர் நலச்சங்கம் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் பாப்பா பாண்டியன் வணிக வளாகத்தில் அமைந்துள்ள தேவேந்திர வேளாளர் நல சங்க அலுவலகத்தில் வைத்து, இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில், விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள், அரசியல் கட்சியினர் உட்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors



CSC Computer Education




Thoothukudi Business Directory