» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் விஏஓ மங்கள இசை!
வியாழன் 10, அக்டோபர் 2024 10:17:15 AM (IST)
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் செய்துங்கநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் ஜ.விஜய மூர்த்தியின் மங்கள இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஐந்தாவது புத்தகத் திருவிழாவில் வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக ஸ்ரீவைகுண்டம் வட்டம் செய்துங்கநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் ஜ.விஜய மூர்த்தியின் மங்கல இசை நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற கிராம நிர்வாக அலுவலர் மங்கள இசையை தனது அழகான மெல்லிசைப் பாணியில் அழகாக இசையை வெளிப்படுத்தி மக்கள் மனங்களை கவர்ந்து, அனைவரது மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.