» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை: காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது!

வியாழன் 10, அக்டோபர் 2024 8:10:05 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம ஏற்பட்டு செக்காரக்குடி தரைப்பாலம் மூழ்கியது. 

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலையில் வெயில் அதிகமாக காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் சுமார் 2.30 மணிக்கு மேல் புதுக்கோட்டை அருகே உள்ள செக்காரக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது. இதனால் அங்கு மகிழம்புரம் பகுதியில் உள்ள ஓடையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளம் ஓடையின் குறுக்கே உள்ள தாம்போதி பாலத்தை மூழ்கடித்து சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 

இதன் காரணமாக செக்காரக்குடி மகிழம்பூ ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், செக்காரக்குடி செல்லும் தரைப்பாலம், கொம்புக்காரநத்தம் தரைப்பாலம் ஆகியவை தண்ணீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். மாணவா்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிபட்டனா். எனவே, மாவட்ட நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனா்.

இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து உள்ளது. சாயர்புரம் பகுதியில் நேற்று மாலை 6 மணிக்கு சாரல் மழை பெய்தது. இதனால் இந்த பகுதியில் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இ்ப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாணவர்கள் மீட்பு 



தளவாய்புரம், கல்லம்பரும்பு, மகிழம்புரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். கனமழை காரணமாக செக்காரக்குடி ஊருக்கு வருகின்ற வழியிலுள்ள தாம்போதி பாலத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 

இதனால் 64 மாணவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் செக்காரக்குடியில் தவித்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு ஊராட்சி மூலம் சாப்பாடு வழங்கப்பட்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் முயற்சியால் மழை குறைந்ததும் இரண்டு வேன்கள் மூலம் இரவு 8:30 மணியளவில் அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory