» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு
புதன் 9, அக்டோபர் 2024 5:18:05 PM (IST)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் "நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள்" குறித்த ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வாயிலாக வருகின்ற அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (திங்கட்கிழமை) "நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள்" எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பல்வேறு முக்கியமான நன்னீர் அலங்கார மீன் இனங்கள், முட்டை மற்றும் குட்டி ஈனும் அலங்கார மீன் இனங்களின் இனப்பெருக்கம், அலங்கார மீன்வளர்ப்பு உபகரணங்கள், அலங்கார மீன்களுக்கான உயிர் உணவுகள், நீர்த்தரக்கட்டுப்பாடு, செயற்கை உணவு தயாரித்தல், கண்ணாடித் தொட்டி அமைத்தல், நோய் மேலாண்மை, பொருளாதாரம் மற்றும் சிறந்த பண்ணை மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்கள் செயல்முறை விளக்கங்களோடு கற்பிக்கப்பட உள்ளன.
அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், சுயதொழிலாக இதனை ஏற்று நடத்த முனைவோருக்கும் இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.300/- பயிற்சியில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்யவும்.
பயிற்சி குறித்த மேலும் விவரங்களை அறிந்து கொள்ள 8870389155, 8122382403, 9892045661 மற்றும் 9994450663 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும். நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா : நலதிட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:21:27 PM (IST)

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)

வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு: தூய்மை பாரத ஓட்டுநர் பணியாளர் நலச்சங்கம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:04:55 PM (IST)

தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணி: ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் ஆய்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 7:58:34 PM (IST)

மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வழங்கப்படும் : ஆட்சியர்
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:26:25 PM (IST)
