» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்டோ மீது மினி லாரி மோதல்: 11 பேர் காயம்!
வெள்ளி 4, அக்டோபர் 2024 8:37:05 AM (IST)
குலசேகரன்பட்டினம் அருகே லோடு ஆட்டோ - மினி லாரி மோதிய விபத்தில் பக்தர்கள் 11 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலுக்கு செக்காரக்குடி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று லோடு ஆட்டோவில் வந்து கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றுவிட்டு மாலையில் திருச்செந்தூர் சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
உடன்குடி அனல்மின் நிலையம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் சென்றபோது எதிரே வந்த மினி லாரி மீது லோடு ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 11 பேரும் காயமடைந்து, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்றனர். இவர்களில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி: கணவர் படுகாயம்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:35:00 PM (IST)

தூத்துக்குடியில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:01:00 PM (IST)

டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது மிளகு ரசமா? கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஆவேசம்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:49:19 PM (IST)

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:39:05 PM (IST)

தந்தையின் நினைவு தினத்தில் மாணவர்களுக்கு தங்க மோதிரம், தங்க கம்மல் பரிசளித்த வாரிசுகள்
ஞாயிறு 15, ஜூன் 2025 7:34:38 PM (IST)

அரசு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 12:04:59 PM (IST)
