» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விவசாய நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் குறைந்த வட்டியில் கடனுதவி: ஆட்சியர் தகவல்
வியாழன் 3, அக்டோபர் 2024 5:21:57 PM (IST)
விவசாய நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் கிரையத் தொகையினை வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வாங்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50% அல்லது அதிகப்பட்சம் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.
தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரையத்தொகையினை தேசியபட்டியலினத்தோர் நிதிமேம்பாட்டுக்கழக நிதியிலியிருந்து பயனாளிகளுக்கு 6 % மிககுறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் தாட்கோ இணையதள (www.tahdco.com) முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
NageswaranOct 6, 2024 - 02:12:40 PM | Posted IP 162.1*****
All district cover sir call to me 9042411139
ஏழுமலைOct 6, 2024 - 04:48:40 AM | Posted IP 172.7*****
ஐயா வணக்கம் ஐயா தூத்துக்குடியில் மட்டும் தான் இந்த வசதி தருவீங்களா இந்தியாவில் அனைத்து மாவட்டங்களுக்கு மாவட்டங்களுக்கு வேலூர் மாவட்டத்திற்கு எல்லாம் கூட உண்டா ஐயா
Mp sekar erodeJun 22, 1728 - 09:30:00 PM | Posted IP 172.7*****
Ayya engaludaiya vagaiyarukka nilamillai yengal mavattathil (erode) intha thatcho moolam intha vivashaya nilam yengalukku kidaithal engaludaiya 62(velladukaiyum meipatharke vazhilamal thavikkirom intha arumaiyana thittam yengal kudumbathirku thatcho mulam kidaithal yezhai cooli yaana nangal aadu maadu valarkkum vivasaya nilam ulla pattiyal ina samuthayathai charthavan yenpathai perumaikal mavatta atchiyaruku yegal vazhnal punniyame!
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி: கணவர் படுகாயம்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:35:00 PM (IST)

தூத்துக்குடியில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:01:00 PM (IST)

டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது மிளகு ரசமா? கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஆவேசம்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:49:19 PM (IST)

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:39:05 PM (IST)

தந்தையின் நினைவு தினத்தில் மாணவர்களுக்கு தங்க மோதிரம், தங்க கம்மல் பரிசளித்த வாரிசுகள்
ஞாயிறு 15, ஜூன் 2025 7:34:38 PM (IST)

அரசு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 12:04:59 PM (IST)

PalrajOct 11, 2024 - 07:48:11 PM | Posted IP 162.1*****