» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சென்னை - தூத்துக்குடி இடையே ஆயுதபூஜை சிறப்பு ரயில் : பயணிகள் சங்கம் நன்றி!

வியாழன் 3, அக்டோபர் 2024 4:42:55 PM (IST)

ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ஆயுதபூஜை வருகிற 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து சனி, ஞாயிறு தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு பயணிகள் செல்வதற்கும், அங்கிருந்து மீண்டும் விடுமுறை முடிந்து சென்னை செல்வதற்கும் ஏதுவாக சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனை ஏற்று ஆயுதபூஜை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி இடையே மொத்தமாக 23 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. வண்டி எண். 06186 சென்னை சென்னை சென்ட்ரல் புறப்படும் நேரம் (8-10-2024 செவ்வாய்க்கிழமை) இரவு 11-45 மணி. தூத்துக்குடி வந்து சேரும் நேரம் மறுநாள் புதன்கிழமை மதியம் 01:50 மணி.

வண்டி எண். 06185 தூத்துக்குடி -சென்னை சென்ட்ரல் (09-10-2024 புதன்கிழமை) தூத்துக்குடி புறப்படும் நேரம் மாலை 04:15 மணி சென்னை சென்ட்ரல் சென்றடையும் நேரம் மறுநாள் வியாழன் காலை 08:55 மணி 

இந்த ரயில், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம் , சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில்களை இயக்கியமைக்கு தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றியை தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் மா. பிரமநாயகம் தெரிவித்துள்ளார். 

சிறப்பு ரயில்கள் கோச்சுகள் விவரம்.

இரண்டாம் வகுப்பு ஏசி 02 பெட்டிகள்,

மூன்றாம் வகுப்பு ஏசி 04 பெட்டிகள், 

இரண்டாம் வகுப்பு சிலிப்பர் 12 பெட்டிகள், 

சாதாரண பொதுப் பெட்டிகள் 03, 

லக்கேஜ் வேன்  02

மொத்தம் 23 பெட்டிகள் உள்ளது .


மக்கள் கருத்து

S NachiappanOct 9, 2024 - 01:43:52 PM | Posted IP 162.1*****

No use for this train. Need train on Thursday 10.10.2024 from சென்னை to தூத்துக்குடி. Sunday 13.10.2024 from தூத்துக்குடி to சென்னை.

BalajiOct 6, 2024 - 04:28:02 PM | Posted IP 162.1*****

Janshatabdi form coimbatore to mayaladurai sent before cholan express Or sent janshatabdi to caddlour port we am in

ஆனந்தன்Oct 5, 2024 - 11:31:10 PM | Posted IP 162.1*****

குலேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் வரை சிறப்பு ரயில் இயக்கும் படி கெட்டுக்கொள்கின்றோம். இப்படிக்கு பக்தர்கள்

Uppathur Er SrinivasanOct 5, 2024 - 04:02:27 PM | Posted IP 172.7*****

திருச்செந்தூர் சென்னை கார்டு லைன் வழியாக ஒரு இரயில் இயக்க கேட்டுக்கொள்கிறேன். Requested to operate Chennai Egmore to Tiruchendur expenses via chord line for festival seasons.

Uppathur Er SrinivasanOct 5, 2024 - 04:02:27 PM | Posted IP 162.1*****

திருச்செந்தூர் சென்னை கார்டு லைன் வழியாக ஒரு இரயில் இயக்க கேட்டுக்கொள்கிறேன். Requested to operate Chennai Egmore to Tiruchendur expenses via chord line for festival seasons.

Uppathur Er SrinivasanOct 5, 2024 - 04:02:27 PM | Posted IP 162.1*****

திருச்செந்தூர் சென்னை கார்டு லைன் வழியாக ஒரு இரயில் இயக்க கேட்டுக்கொள்கிறேன். Requested to operate Chennai Egmore to Tiruchendur expenses via chord line for festival seasons.

SudalaiOct 5, 2024 - 03:47:31 PM | Posted IP 162.1*****

🙏

RajaOct 5, 2024 - 12:07:46 PM | Posted IP 172.7*****

ndna

RajanOct 5, 2024 - 09:02:11 AM | Posted IP 172.7*****

Kindly keep daily day time service for this route

inbaOct 5, 2024 - 08:45:18 AM | Posted IP 162.1*****

nandri

Jai sree RamOct 4, 2024 - 12:14:00 PM | Posted IP 162.1*****

Thoothukudi to tenkasi please I want to train sir

செய்யது அஹமதுOct 4, 2024 - 08:28:56 AM | Posted IP 172.7*****

வண்டி எண் மற்றும் முன்பதிவு உண்டா என்ற தகவல்களை தெரிவிக்கலாமே.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory