» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடன்: முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!

செவ்வாய் 1, அக்டோபர் 2024 8:43:48 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "முதலமைச்சர் 78வது சுதந்திர தினத்தன்று (15-08-2024) ஆற்றிய சுதந்திர தின உரையின் போது முன்னாள் படைவீரர் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழி வகை செய்யப்படும் எனவும், 

இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 03 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் எனவும் இவர்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் எனவும், இராணுவ பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் இராணுவ பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள் தங்கள் விருப்பத்தினை 05-10-2024-க்குள் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0461-2902025 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory