» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாம்

செவ்வாய் 1, அக்டோபர் 2024 5:31:32 PM (IST)



தூத்துக்குடி பி.எம்.சி பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் போதிக்கும் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பணியிடை பயிற்சி முகாம் பி.எம்.சி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சி முகாமினை மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சிதம்பரநாதன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பி.எம்.சி மெட்ரிக். பள்ளி முதல்வர் பால்கனி அனைவரையும் வரவேற்று உரை ஆற்றினார்.

முகாமில் பயிற்சியாளர்களாக கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் முத்துசாமி, செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் க. சிவசுப்பிரமணியன் மற்றும் இலஞ்சி ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ஐயப்பன் ஆகியோர் பற்கேற்று ஆசிரியர்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பு, செய்யுள் கற்பித்தல், கற்றல் கற்பித்தலில் துணை கருவிகளின் பயன்பாடு மற்றும் வினாக்கள் தயாரித்தல் ஆகிய தலைப்புகளில் பயிற்சியளித்தனர்.

இப்பயிற்சி முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 95 தனியார் பள்ளிகளிலிருந்து தமிழாசிரியர்கள், கலந்து கொண்டு பயன்பெற்றனர். பயிற்சி முகாமில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது. இப்பயிற்சி முகாமினை தனியார் பள்ளிகள் மாவட்டக்கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி ஸ்ரீ காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கு.மீனாகுமாரி மற்றும் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் இரா. செல்வி வைஷ்ணவி ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory